நாமக்கல், ஜூலை 16: நாமக்கல் பகுதியில், 4 நாட்கள் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது என நாமக்கல் வானிலை மையம் தெரிவித்துள்ளது.நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை விபரம்: நாமக்கல் மற்றும் அதன் சுற்றப்புறபகுதியில் இன்றும், நாளையும் 6 மில்லிமீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 18,19ம் தேதிகளில் 3 மில்லிமீட்டர் மழை பெய்யவாய்ப்புள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்திலும், 18, 19-ம் தேதிகளில் 12 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 60 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் காணப்படும். மேலும் மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெள்ளை கழிச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததுள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போடவேண்டும். மேலும் உரிய பாதுகாப்பு முறைகளை அதிகப்படுத்தவேண்டும். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.