புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் பெண்கள், சிறுமிகள் என மொத்தம் 13.13 லட்சம் பேர் காணாமல் போயுள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் அளித்த தகவலின்படி, கடந்த 2019 முதல் 2021ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 61 ஆயிரத்து 648 பேரும், 18 வயதுக்கு உட்பட்ட 2 லட்சத்து 51 ஆயிரத்து 430 சிறுமிகளும் காணாமல் போனதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் 13.13 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளனர்.
இதில், மத்திய பிரதேசத்தில் பெண்கள், சிறுமிகள் என அதிகபட்சமாக 1,98,414 பேரும், மேற்கு வங்கத்தில் 1,93,511, மகாராஷ்டிராவில் 1,91,433 பேரும் காணாமல் போயுள்ளனர்.யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக டெல்லியில் 61,054 பெண்கள் மற்றும் 22,919 சிறுமிகளும் ஜம்மு காஷ்மீரில் 8,617 பெண்கள், 1,148 சிறுமிகள் இதே கால கட்டத்தில் காணாமல் போய் இருக்கின்றனர் என்று தெரிவித்தது.மேலும், நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு முயற்சிகள், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.