புதுடெல்லி: பாஜ தேசிய தலைவராக உள்ள ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிந்து விட்டது. புதிய தலைவரை தேர்வு செய்ய முடியாமல் பா.ஜ திணறி வருகிறது. புதிய தலைவர் போட்டியில் 3 பேரின் பெயர்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. ஒடிசாவைச் சேர்ந்த முக்கிய ஓபிசி தலைவரும், ஒன்றிய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான் முதலிடத்தில் உள்ளார். மபி முன்னாள் முதல்வரும், தற்போதைய ஒன்றிய விவசாயத்துறை அமைச்சருமான சிவராஜ்சிங் சவுகான், அரியானா முன்னாள் முதல்வரும், தற்போது ஒன்றிய அமைச்சருமான மனோகர் லால் கட்டார் ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.
3 ஒன்றிய அமைச்சர்களில் அடுத்த பாஜ தலைவர் யார்?
0