கராச்சி: பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பர்கான் நகரத்திலிருந்து 60கிமீ தொலைவில் உள்ள பகுதியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவானது. ராரா ஷைம், கிங்ரி, வாஸ்து உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் பல்வேறு இடங்களில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
இதில் ராரா ஷைம் என்ற இடத்தில் ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர். ஆனால் இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து அதேபகுதியில் 2ம் முறைஏற்பட்ட நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவானது. மேலும் முல்கான் நகருக்கு மேற்கே சுமார் 149கிமீ தொலைவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரண்டு நிலநடுக்கங்களிலும் ஏற்பட்ட சேதங்கள் பற்றி எந்த தகவலும் வௌியாகவில்லை. தொடர்ந்து மூன்றுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.