முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மற்றும் நீலகிரிக்கு 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைந்தன. அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து உதகை, வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்தது. கோவை, நீலகிரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை. தீயணைப்புத் துறை, மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல். கண்காணிப்பு அலுவலர்களான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.