தர்மபுரி, செப்.14: தர்மபுரி, கிஷ்ணகிரி மாவட்டத்திற்கு 3,989 டன் உரங்கள் சரக்கு ரயில் மூலம் தர்மபுரிக்கு வந்தது. தர்மபுரி ரயில் நிலையத்தில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்களுக்கு உரங்களை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியை தர்மபுரி வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) தேன்மொழி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, டேன்பெட் மண்டல மேலாளர் முருகானந்தம், தர்மபுரி கிரிப்கோ விற்பனை அலுவலர் நாகராஜ் மற்றும் தர்மபுரி ஐபிஎல் விற்பனை அலுவலர இளையராஜா ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் விஜயா கூறுகையில், ‘விவசாயிகள் ஆதார் எண்ணுடன் சென்று, உரங்கள் பெற்று பயன்படுத்தலாம். மண்வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். விற்பனை முனைய கருவி மூலம் ரசீது பெற்று உரங்களை வாங்கி பயன்பெறலாம்,’ என்றார்.