*அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஊட்டி : மக்கள் நல்வாழ்த்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் ரூ.377.83 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது என மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் தெரிவித்தார். ஊட்டியில் நடந்த பூர்வ குடிகள் தின விழாவில் கலந்துக் கொண்ட மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
ஊட்டியில் 15 ஏக்கர் பரப்பளவில் ரூ.461.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நிர்வாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இக்கட்டிடம் அனைத்தும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணைய விதிகளுக்குகேற்ப தரைத்தளம் மற்றும் முதல் தளம் மட்டுமே கொண்டதாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகின்றன. கல்லூரி முதல்வர் குடியிருப்பு ஆகிய கட்டிடப்பணிகள் முடிவுற்றுள்ளன.
தடுப்புசுவர், வடிகால் மற்றும் அணுகுசாலை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் இணைப்பு பெறுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அதிக மழைப்பொழிவு மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் சேர்க்கைக்கான புதிய கட்டிடம், குடியிருப்பு கட்டிடம், கூடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, கண் அறுவை சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடங்கள், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள், பந்தலூர் அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, சமையலறை மற்றும் சலவையகம், குன்னூர் அரசு மருத்துவமனையில், பொது சுகாதார ஆய்வக கட்டிடம், குன்னூர் அரசு மருத்துவமனையில் புதிய பிணவறை கட்டிடம், எமரால்டு அரசு மருத்துவமனையில், பாதுகாப்புசுவர், ஆம்புலன்ஸ் ஷெட், மற்றும் நோயாளர் உடனாள் தங்கும் அறை ஆகியவை கட்டப்பட்டு வருகிறது.
கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார நலவாழ்வு மையம், தங்காடு ஓரநள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார நலவாழ்வு மையம், கேத்தி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், 12. கூடலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், உதகமண்டலம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஹேப்பிவேலி, துணை சுகாதார நிலையங்களை பொறுத்தவரை அணிக்கொரை, தாவணி, நஞ்சநாடு, ஓட்டுப்பட்டரை,நந்தட்டி, தேவாலா, எள்ளநல்லி, நடுவட்டம், நடுவட்டம் டி.ஆர்பஜார், நடுவட்டம் அணுமாபுரம், பழனியப்பா அய்யன்கொல்லி, கோட்டப்பாடி, செரச்சல், பாலாகொலா, உலிக்கல், ஹேப்பிவேலி, ஏலமன்னா என மொத்தம் ரூ.377.83 கோடி மதிப்பில் கட்டுமான நிலையில் உள்ளது.
மேலும், நீலகிரி மாவட்டத்தில், ரூ.30 இலட்சம் செலவில், மசக்கல் துணை சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.25 கோடி செலவில், தெப்பக்காடு மற்றும் இத்தலார் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டிடம் மற்றும் மருத்துவ அலுவலர் குடியிருப்பு கட்டிடம், ரூ.3.03 கோடி செலவில் கோத்தகிரி அரசு மாவட்ட தலைமை மருத்தவமனையில்,அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம், ரூ.14.80 கோடி செலவில் எமரால்டு அரசு மருத்துவமனையில், 50 படுக்கைகள கொண்ட வார்டு,அறுவை சிகிச்சைஅரங்க கட்டிடம், ரூ.145.53 கோடி செலவில் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரியில்,150 மருத்துவ மாணாக்கர் சேர்க்கைக்கான புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடமும், ரூ.164.91 கோடி செலவில், ஆர்.கே.புரம் நகர்புற நலவாழ்வு மைய கட்டிடம், மசக்கல் துணை சுகாதார நிலைய கட்டிடம் தெப்பக்காடு மற்றும் இத்தலார் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டிடம் மற்றும் மருத்துவ அலுவலர் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
கோத்தகிரி அரசு மாவட்ட தலைமை மருத்தவமனையில், அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம், எமரால்டு அரசு மருத்துவமனையில், 50 படுக்கைகள் கொண்ட வார்டு, அறுவை சிகிச்சை அரங்ககட்டிடம், நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரியில், 150 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடம் மற்றும் அதி நவீன மருத்துவ உபகரணங்கள் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.அதனைத் தொடர்ந்து, ரூ.381.11 கோடி செலவில் 36 புதிய மருத்துவ கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ரூ.8.88 கோடி மதிப்பீட்டில் 14 அறிவிப்புகளின் மூலம் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு மருத்துவ கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்டத்தில் ரூ.35 லட்சத்தில் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சி.ஆர்ம்., கருவி, ரூ.30 லட்சத்தில் கொலக்கோம்பை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்த பரிசோதனைகளுக்கான பகுப்பாய்வு கருவி, ரூ.60 லட்சத்தில் பிக்கட்டி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.20 லட்சத்தில் கரிக்கையூர் துணை சுகாதார நிலையத்தில், இரு சக்கர அவசர கால மருத்துவ வாகனம், ரூ.4.50 கோடியில் 9 புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், 5 துணை சுகாதார நிலையங்களில் ரூ.60 லட்சத்தில் இந்திய மருத்துவ முறை மருத்துவ பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 5 லட்சத்து 23 ஆயிரத்து 951 பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள். இன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் இதுவரை 955 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.இருதய பாதுகாப்பு திட்டம், சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம் ஆகிய திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 59 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்தப்பட்டுள்ளனர், என்றார்.