புதுக்கோட்டை, ஜூன் 5: புதுக்கோட்டையில் கடந்த 30ஆம் தேதி ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாஜக நடத்திய பேரணிக்காக 35 உயரத்தில் வைக்கப்பட்ட பிரதமர் மோடியின் கட் அவுட்டை மாநகராட்சிப் பணியாளர்கள் நேற்று அகற்றினர். புதுக்கோட்டையில் கடந்த 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி பாஜக சார்பில் நடத்தப்பட்டது.
இதற்காக 35 உயரத்தில் பிரதமர் மோடி ராணுவ உடையணிந்து நிற்கும் பிரம்மாண்ட கட் அவுட் பழைய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று அந்த கட் அவுட்டை மாநகராட்சிப் பணியாளர்கள் முழுமையாக அகற்றினர். இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், மிக உயரமான கட்அவுட், சேதமடைந்து விழுந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு கருதி அதனை எடுத்ததாக தெரிவித்தனர்.