சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் 34 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 32 பேர் குணமடைந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது ஆசியாவில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. இதில், சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மே 12ம் தேதி முதல் 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 112 பேர் குணமடைந்துள்ளனர் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர், அதில் 32 பேர் குணமடைந்துள்ளனர்.
இது தவிர கேரளாவில் 69 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒருவர் இறந்துள்ளார். மேலும் கர்நாடகாவில் 8 பேரும், மகாராஷ்டிராவில் 44 பேரும், டெல்லியில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.