உசிலம்பட்டி அருகே கே.போத்தம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் தனுஷ்கோடி, மலைராமனுக்கு சொந்தமான 30 ஆடுகள் உயிரிழந்தது. இன்று வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய ஆடுகள் நீர் அருந்திய பிறகு மயக்கமடைந்தன. 60 ஆடுகளில் 30 ஆடுகள் பலியான நிலையில் 30 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.