சென்னை: மாவீரர் பூலித்தேவரின் 308வது பிறந்தநாளையொட்டி அடக்க நினைத்தால் தமிழர் பொறுக்கமாட்டார்; அந்நியர் ஆதிக்கத்தை அடித்து நொறுக்கியவர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய நிலப்பரப்பில் முதன்முதலில் போர்முரசம் கொட்டி, விடுதலை போராட்டத்துக்கான உணர்வை கிளர்ந்தெழ செய்த மாவீரர் பூலித்தேவரின் 308வது பிறந்தநாள். அடக்க நினைத்தால் தமிழர் பொறுக்க மாட்டார், அந்நியர் ஆதிக்கத்தை அடித்து நொறுக்குவர் எனக் காட்டிய அவரது புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.