தூத்துக்குடி, ஜூன் 28: தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார், மொட்டக்கோபுரம் கடற்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், சமீர்வியாஸ் நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் அருணாசலம்(28), கணபதிநகரை சேர்ந்த முருகன் மகன் உத்திரக்கண்ணன்(22) என்பது தெரிய வந்தது. பைக்கில் சோதனையிட்ட போது 300 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.