காரிமங்கலம்: தொழிலாளர் தினத்தையொட்டி காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. பைசுஅள்ளியில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சந்திரா மாதையன், துணை தலைவர் விஜயா தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி திட்ட அலுவலர் சரவணபவா, பிடிஓ கலைவாணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். பொதுமக்கள் முன்னிலையில் பொது சுகாதாரம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். செயலாளர் குமார் நன்றி கூறினார்.
இதேபோல் பெரியாம்பட்டி, கோவிலூர், காலப்பனஅல்லி, மல்லிகுட்டை, பூமாண்டஅல்லி ஆகிய ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் பொது சுகாதாரத்தை வலியுறுத்தி பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர். பிடிஓ கலைவாணி, பஞ்சாயத்து தலைவர்கள் ஜெயலட்சுமி சங்கர், தமிழ்ச்செல்வி நந்திசிவம், நந்தினி பிரியா செந்தில்குமார், பச்சையம்மாள் சிவராஜ், கவிதா நாகராஜ் மற்றும் துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், செயலாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்