விராலிமலை,மே 6: விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3.3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், குடுமியான்மலை பகுதிகளில் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வருவதோடு அவ்வப்போது கோடை மழை பெய்து குளிர்ந்த சூழலுக்கு அப்பகுதிகள் மாறி வருகிறது என்பது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெயிலில் வெந்து தணிந்த மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு விராலிமலையில் 6 மி. மீ, இலுப்பூர் 8 மி.மீ, அன்னவாசல் 4 மி.மீ, குடுமியான்மலை 15 மி.மீ என விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதிகளில் மொத்தம் 3.3 சென்டிமீட்டர் மழை செய்துள்ளது என்பது மக்கள் மனம் மகிழ்ந்து உள்ளது.