வேலூர், ஜூலை 1: பெற்றோர் படிக்க சொல்லி அறிவுறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுவர்களை வேலூர் போலீசார் பழனியில் மீட்டு நேற்று முன்தினம் இரவு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வேலூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் நெருங்கிய நண்பர்களான 3 மாணவர்கள் கடந்த 27ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைககவில்லை. இதுகுறித்து மாயமான 3 பேரின் பெற்றோர்களும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் பாகாயம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து மாணவர்களை தேடி வந்தார். இதற்கிடையில், மறுநாள் 28ம் தேதி இரவு பழனி பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுவர்களையும் அங்குள்ள போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் 3 பேரும் வேலூரில் உள்ள அரசு பள்ளியில் படிப்பதாகவும், பெற்றோர் படிக்க சொல்லியும், வேலை செய்ய சொல்லியும் திட்டியதால், வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பழனி போலீசார் கொடுத்த தகவலின் பேரில் வேலூர் பாகாயம் போலீசார் பழநிக்கு விரைந்து சென்று 3 மாணவர்களையும் மீட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு வேலூர் அழைத்து வந்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
3 மாணவர்களை பழனியில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் வீட்டை விட்டு வெளியேறிய
0
previous post