புதுக்கோட்டை, மே 26: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கே.புதுப்பட்டி, கொன்னையம்பட்டி மற்றும் கீழவேகுப்பட்டி ஆகிய 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்துக்குட்பட்ட கே.புதுப்பட்டியில் வரும் மே 28ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் பொன்னமராவதி வட்டத்துக்குட்பட்ட கொன்னையம்பட்டியில் வரும் மே 29ம் தேதியும், கீழவேகுப்பட்டியில் வரும் மே 31ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மாநில அரசின் கால்நடை பராமரிப்புத் துறை அரசுச் செயலர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ளார்.
3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி
62