ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெரிய தள்ளப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு(31). அரசு பஸ் தற்காலிக டிரைவர். நேற்று சிங்காரப்பேட்டையில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்று விட்டு மாலை 3 மணியளவில் பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இதபோல், ஊத்தங்கரையில் உள்ள பேக்கரி கடை மாஸ்டரான வினோத்குமார்(24), நண்பர் ராஜசேகருடன்(30) பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
இரு பைக்குகளும் திருப்பத்தூர்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் குரங்கு கல் மேடு என்னுமிடத்தில் நேருக்கு நேர் மோதின. இதில் தென்னரசு, வினோத்குமார் ஆகியோர் இறந்தனர். அவிபத்துக்குள்ளான பைக்குகள் மீது மற்றொரு பைக் மோதி சவுந்திரராஜன்(40) என்பவர் காயமடைந்தார்.