திருவள்ளூர்: திருவள்ளூர் காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் காசிராஜன் (38). இவர் காக்களூரிலிருந்து புட்லூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் காயலான்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் காசிராஜன் தனது பைக்கில் நேற்று முன்தினம் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். காக்களூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த திருவள்ளூர் சேலையூர் பகுதியைச் சேர்ந்த பெட்ரிக் சாமுவேல் என்ற காந்தி (24), திருவள்ளூர் பெரியகுப்பத்தைச் சேர்ந்த விஷால் (28) ஆகிய 2 பேரும் தகராறில் ஈடுபட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்செயினை பறிக்க முயன்றனர். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் சிக்கினர்
0
previous post