‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் மூலம் இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ஒன்றிய அரசு மீட்டு வருகிறது. அதன்படி இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட முதல் விமானத்தில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நேற்று முன்தினம் காலை டெல்லி திரும்பினர். இதே போல, நேற்று காலை 2வது மீட்பு விமானம் மூலம் 235 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர். இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் சார்பில் மேலும் 2 விமானங்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த இரு விமானங்களும் இன்று காலை டெல்லி வந்தடையும்.