அண்ணாநகர்: சென்னை டி.பி.சத்திரம் காவல்நிலைய தலைமை காவலர் அய்யனார் (34), கமலக்கண்ணன் (33). இவர்கள், நேற்று முன்தினம் டி.பி.சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கே.வி.என் புரம் பகுதியில் உள்ள ஒரு இருட்டான குறுக்கு சந்தில் 2 பேர் பைக்கில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை ரோந்து போலீசார் அழைத்தனர். ஆனால் அவர்கள், போலீசாரை பார்த்ததும் தப்பிடி ஓட முயன்றனர். இருவரை மடக்கி பிடித்தபோது பைக்கை கீழே போட்டு விட்டு அய்யனாரை தாக்கி விட்டு இருவரும் தப்பினர். இதில் அய்யனாருக்கு இடது கை கட்ட விரவில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிசசை முடிந்து வீடு திரும்பிய அய்யனார், டி.பி சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்கள் டி.பி.சத்திரம் கே.வி.என் புரம் முதல் தெருவை சேர்ந்த அருண்குமார் (27), கூட்டாளி மனோஜ் (18) என்பது தெரியவந்தது. இருவர் மீது வழக்குபதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.