கொழும்பு: இலங்கையுடனான 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 32 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 240 ரன் குவித்தது. அவிஷ்கா, கமிந்து தலா 40 ரன், வெல்லாலகே 39, குசால் 30, கேப்டன் அசலங்கா 25 ரன் எடுத்தனர். வாஷிங்டன் 3, குல்தீப் 2, சிராஜ், அக்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா42.2 ஓவரில் 208 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் ரோகித் 64, அக்சர் 44, கில் 35, வாஷிங்டன் 15 ரன் எடுத்தனர். இலங்கை பந்துவீச்சில் வாண்டர்சே 6, அசலங்கா 3 விக்கெட் வீழ்த்தினர்.