சென்னை: சென்னைஅடையாறில் உள்ள பாரத் பல்கலைக்கழக அலுவலகம், தி.நகர் ஜிஎன் செட்டி தெருவில் உள்ள நட்சத்திர ஓட்டல், குரோம்பேட்டையில் உள்ள மருத்துவ கல்லூரி, வண்டலூர் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், பல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி, வாலாஜாபாத் அருகே உள்ள மதுபான தொழிற்சாலைகள், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட் மற்றும் புதுச்சேரி மாநிலம் அகரம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி என 40 இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக நேற்றும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரொக்க பணம், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனையின் இடையே நேற்று மதியம் மற்றொரு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.