பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.