பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 மாணவிகள் உயிரிழந்தனர். மான்வியின் புறநகரில் உள்ள லலோலா பள்ளியிலிருந்து ராய்ச்சூர் நோக்கி சென்றபோது பள்ளி பேருந்து விபத்தில் சிக்கியது. மான்வி தாலூகாவில் உள்ள கப்கல் அருகே நிகழ்ந்த விபத்தில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 13 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயம் அடைந்த குழந்தைகள் மேல்சிகிச்சைக்காக RIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.