
பெரம்பூர்: அயனாவரம் மாதா கோயில் தெருவில் உள்ள பூங்காவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர்கள் சிலர் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தனர். இதனை அயனாவரம், திருவள்ளுவர் நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் (48) என்பவர் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று முன்தினம் அவரை தாக்க தேடியுள்ளனர். அப்போது, சுரேஷ்குமாரின் 16 வயது மகன் மற்றும் உறவினரான தினேஷ் குமார் (21) ஆகிய இருவர் கிடைத்தால், அவர்களை வெட்டியுள்ளனர். இதில் தினேஷ்குமாருக்கு தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
சிறுவனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. போலீசார் விசாரணையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மேடவாக்கம் 2வது தெருவைச் சேர்ந்த தனுஷ் என்ற தமிழரசன் (19), அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (22), வசந்த் (21), சதீஷ் (22), முத்துக்குமரன் (19), நவீன் (20) ஆகிய 6 பேர் இருவரை வெட்டியது தெரிந்து. அவர்களை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.