குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டியை சேர்ந்தவர் மொகிலி(39), கட்டிட மேஸ்திரி. மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவரது வீட்டில் இன்று குலதெய்வ வழிபாடு நடக்க இருந்தது. இதற்காக மாடியில் நேற்று பந்தல் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மொகிலி மற்றும் அவரது உறவினரான பெங்களூரை சேர்ந்த கிஷோர்(22) ஆகிய இருவரும் இரும்பு பைப்புகளை மாடிக்கு எடுத்து சென்றனர். அப்போது உயர் மின் அழுத்த கம்பி, இரும்பு பைப் மீது உரசியதில் இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தனர்.