மாலே: மாலத்தீவில் உள்ள ஹா தால் மக்னுதூ தீவில் விமான நிலையம் கட்டுவதற்கான நிலத்தை சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த இந்தியர்களில் இருவர் நேற்று முன்தினம் அத்தீவின் துறைமுகப் பகுதியில் மீன் மார்கெட் அமைந்துள்ள இடத்தின் அருகே வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததில் இருவரும் உடல் சிதறி பலியாகினர். இத்துயரச் சம்பவம் அங்குள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.