தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி கிராமத்தில் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிணற்றில் நீச்சல் அடித்துக் குளித்துக்கொண்டிருந்த நிலையில், ஆகாஷ் (14), சாமுவேல் (14) ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சடலங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
previous post