வேலூர், ஆக.7: வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 28 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொலை, மணல் கடத்தல், கொள்ளை, திருட்டு, போதை பொருள் கடத்தல், மதுவிலக்கு என பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படும் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஒரு மாத காலத்தில் மொத்தம் 28 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.