சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுகிறார். முன்னதாக, வரும் 22ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்ட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றம் செய்துள்ளனர். 15 நாட்கள் அமெரிக்கா சென்று வரும் நிலையில், முதல்வரின் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை முதல்வர் சந்திக்க உள்ளார்.