காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் – வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர கோயிலில் 27 நட்சத்திர விருட்சங்கள், 12 ராசி விருட்சங்கள் உள்ளிட்ட பலவகை விருட்சங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இக்கோயிலுக்கு காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த கைத்தண்டலம் கிராமத்தில் எழில்சோலை அமைப்பின் சார்பில் மாசிலாமணி என்பவர் நேற்று கோயிலுக்கு அரியவகை விருட்சங்களான மந்தாரை, சுடுமுருங்கை, கருமருது, பூமருது, மகிழம், ஆண் குன்றுமணி, கடுக்காய், தான்றிக்காய், அசோகா, கருங்காலி, திருவோடு, ருத்ராட்சம், வேங்கை, நீர்மருது, நாகலிங்கம், கடம்பு, சொர்க்கம், வன்னி, முள்முருங்கை உள்ளிட்ட 25 வகை மரங்களை கோயில் வளாகத்தில் பக்தர்கள் பார்வையிடுவதற்காக வழங்கினார்.
27 நட்சத்திர கோயிலுக்கு அரிய வகை மரங்கள்
0