நெல்லை, ஏப்.24: நெல்லை மாவட்டத்தில் பதுக்கிவைத்து மது விற்ற 26 பேரை போலீசார் கைதுசெய்தனர். நெல்லை மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் கடந்த 16ம்தேதி முதல் 22ம்தேதி வரை மாவட்டம் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர் இதில் பல்வேறு பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த 26 பேரை கண்டறிந்து கைதுசெய்த போலீசார், இவர்களிடம் இருந்து 192 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.