புதுடெல்லி: ஹீரோ மோட்டார்ஸ் நிர்வாக தலைவர் பவன் முஞ்சாலின் ரூ.24.95 கோடி சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாக தலைவரும் இயக்குநருமான பவன் காந்த் முஞ்சால் வெளிநாடு சென்ற போது சட்ட விரோதமாக ரூ.54 கோடிக்கு அந்நிய செலாவணி பெற்றதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் வழக்கு பதிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘பவன் முஞ்சாலின் வெளிநாட்டு பயணத்தின் போது, மூன்றாம் நபர்களின் பெயரில் பெற்ற அந்நிய செலாவணியை பணம் அல்லது கார்டு மூலம் எடுத்து சென்றுள்ளார்.எனவே டெல்லியில் ரூ.24.95 கோடி மதிப்பிலான 3 நிலங்கள் முடக்கப்பட்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.