பாட்னா: பீகார் மாநிலம் முசாபர்பூரில் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலை உள்ளது. இங்கு தேர்வு எழுதிய முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு 100க்கு 257 மதிப்பெண், 30 மதிப்பெண் கொண்ட செய்முறை தேர்வுக்கு 225 மதிப்பெண் வழங்கப்பட்டது. மேலும் நன்றாக தேர்வு எழுதிய பல மாணவர்கள் பெயிலாக்க பட்டனர். பல மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த முடிவுகள் வெளியானது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து பீகார் பல்கலை தேர்வு முடிவுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதுபற்றி கேட்ட போது தொழில்நுட்பம் மற்றும் மனித பிழை காரணமாக இந்த தவறு நடந்ததாக பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் வெளிப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில், இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளில் மதிப்பெண்கள் கூட்டுதல், விடைத்தாள் மதிப்பீடு மற்றும் தேர்வு முடிவுகளை வெளியிடுதல் ஆகியவற்றில் பெரும் அலட்சியம் காட்டப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அடுத்த இரண்டு வேலை நாட்களுக்குள் அனைத்துப் பிழைகளும் சரி செய்யப்படும் என்று பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடடே… இது புதுசா இருக்கே.. 100க்கு 257 மதிப்பெண் வழங்கிய பீகார் பல்கலை
0
previous post