திருவலம், ஜூலை26: திருவலம் அருகே வங்கி பெண் ஊழியர் வீட்டில் 25சவரன், பணம் திருட்டு வழக்கில் மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த குகையநெல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகரை சேர்ந்தவர் பானுமதி(57). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் பெல் டவுன் ஷிப்பில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி காலை வழக்கம்போல் வங்கிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 25 சவரன் தங்க நகை, ரொக்கம் ₹25ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வங்கி ஊழியர் பானுமதி திருவலம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்பி மணிவண்ணனின் உத்தரவு பேரில் காட்பாடி டிஎஸ்பி சரவணன் பரிந்துரையின்படி காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் கைரேகை, சிசிடிவி கேமரா பதிவு குறித்து தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
25 சவரன், பணம் திருட்டு வழக்கில் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை எஸ்பி உத்தரவு திருவலம் அருகே வங்கி பெண் ஊழியர் வீட்டில்
69