புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, “நாடு முழுவதும் தற்போது 5,364 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 498 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து விட்டனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தநிலையில் குஜராத், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், தனி வார்டுகள், அதிக படுக்கை வசதிகள், வென்டிலேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழப்பு இந்தியாவில் 5,364 பேருக்கு கொரோனா: சுகாதார தயார் நிலையில் இருக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்
0