திருமலை: திருப்பதியில் ஜூன் மாதம் 23 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 23 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்கள் கோயில் உண்டியலில் ரூ.116.14 கோடி காணிக்கையாக செலுத்தினர். மேலும் 10.80 லட்சம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். 24.38 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு, 1.06 கோடி லட்டு விற்பனை செய்யப்பட்டது.