ராமேஸ்வரம்: எல்லை தாண்டி வந்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. 2 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை. இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு மோதி மீனவர் மலைச்சாமி உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் அட்டூழியம் நடந்துள்ளது.