புதுடெல்லி: இந்திய சட்ட ஆணையம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. தற்போது நடைமுறையில் உள்ள 22வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் 22வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி 22வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது. சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி ரிது ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன் லோக்பால் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.