சென்னை: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அக்.20, 21, 22-ல் சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 2,265 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.