ஈரோடு மாவட்டத்தில் உள்ள 109 அரசு பள்ளிகளை சேர்ந்த 5,190 மாணவர்கள், 6,726 மாணவிகள் என மொத்தம் 11,916 தேர்வு எழுதினர். இதில், 4,836 மாணவர்களும், 6,452 மாணவிகள் என மொத்தம் 11,288 பேர் அதாவது 94.73 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், ஈரோடு அரசு மாதிரிப்பள்ளி, அந்தியூர் மாதிரி அரசுப்பள்ளி, ஈரோடு காசிபாளையம் அரசு பள்ளி, அய்யம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, தாண்டாம்பாளையம், பாசூர், எழுமாத்தூர், சாலைப்புதூர், பி.பெ.அக்ரஹாரம், மின்னப்பாளையம், சிவகிரி, தாமரைப்பாளையம், பங்களாபுதூர், சவக்காட்டுப்பாளையம், ஏளூர், திப்பம்பாளையம், காஞ்சிக்கோவில், ஈங்கூர், பனையம்பள்ளி, டாடம்பாளையம் ஆகிய 21 அரசு மேல்நிலைப்பள்ளிகள் படித்த மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதேபோல், மாவட்டத்தில் உள்ள 12 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 5 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும், 4 பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகளில் 2 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள 103 தனியார் பள்ளிகளில், 67 பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.