Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதிவிடுவார்: டிடிவி தினகரன் காட்டம்

சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதிவிடுவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மது ஒழிப்பு தமிழ்நாட்டிற்கு அவசியமான ஒன்று. மகாத்மா காந்தி பிறந்தநாளில் விசிகவின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடப்பது சிறந்தது. எங்களை அழைத்து இருந்தால் கலந்து கொண்டு இருப்போம். ஆனால் அழைக்கவில்லை. இருப்பினும் எங்களுடைய ஆதரவை தெரிவிக்கிறோம். இரட்டை இலை உள்ளது என அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு காவடி தூக்கினால் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவர் கட்சிக்கு முடிவுரை எழுதிவிடுவார். எடப்பாடி ஆசைக்காக அமமுக என்ற கட்சி இல்லை எனக் கூறுவார். எங்களுடைய நிர்வாகிகள் சிலரை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளார். பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டது என்று கூறுவது போல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.