சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் போட்டி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், என்.டி.ஏ. கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வந்திருக்கின்றன; நிறைய கட்சிகள் போயிருக்கின்றன. என் மீது யார் குற்றம்சாட்டினாலும் நான் அதை பொருட்படுத்துவதில்லை. 2024 தேர்தல் முடிவில் மக்களுடைய ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது தெரியும் என குறிப்பிட்டார்.