Wednesday, April 24, 2024
Home » 2021 சட்டமன்ற தேர்தலின் போது நிராகரிப்பட்ட தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்: அதிமுக வெற்றியை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

2021 சட்டமன்ற தேர்தலின் போது நிராகரிப்பட்ட தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்: அதிமுக வெற்றியை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

by Karthik Yash

சென்னை: கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் அசோக் குமார் போட்டியிட்டார். திமுக சார்பில் செங்குட்டுவன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அசோக்குமார் 794 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘605 தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படாமல் நிராகரிக்கப்பட்டது’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘605 தபால் வாக்குகளையும் உயர்நீதிமன்ற பதிவாளர் தேர்தல் ஆணையத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் எண்ண வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

* 15 லட்சம் வாக்காளர்களை கொண்ட வடசென்னை தொகுதி
கூவம் ஆற்றின் வடக்கு பகுதியில் இருக்கும் சென்னையின் பகுதி வட சென்னை என்று அழைக்கப்படுகிறது. சென்னையின் பழமையான பகுதியாக வட சென்னை கருதப்படுகிறது. இங்குதான் சென்னை தொடங்கியது என்றும் சொல்லலாம். பழைய மெட்ராஸ் என்று அழைக்கப்படும் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியானது, தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வடசென்னை 2வது தொகுதியாகும். தொழிற்சாலைகளும், மீன்பிடித் தொழிலும் செழித்தோங்கும் வட சென்னை தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பிற்கு முன் வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில், ராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

2008ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே நகர்), பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இந்த நாடாளுமன்ற தொகுதியில் உள்ளன. ஒட்டு மொத்த சென்னையும் திமுகவின் கோட்டை என்று கூறப்படும் நிலையில், அதிலும் குறிப்பாக வடசென்னை திமுகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. இதுவரை இந்தத் தொகுதியில் 16 முறை தேர்தல் நடந்துள்ள நிலையில், அதில் 11 முறை திமுக நேரடியாக போட்டியிட்டு வென்றுள்ளது. இதில் இரண்டு தேர்தல்கள் தி.மு.க தோன்றுவதற்கு முன் நடந்தவை. அப்படி பார்த்தோமேயானால் 14 தேர்தல்களில் 11 முறை திமுக வென்றுள்ளது.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் தலித்துகள் ஆகியோரின் வாக்குகளே வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன. தமிழக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதில் இத்தொகுதியானது முன்னிலையில் உள்ளது. ஆயிரக்கணக்கான கனரக, நடுத்தர மற்றும் குறு-சிறு தொழிற்சாலைகள் வடசென்னையில் தான் அமைந்துள்ளன. இங்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தொகுதியாகவும் வடசென்னை உள்ளது. மேலும், சென்னை துறைமுகம் மற்றும் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை ஆகிய முக்கிய இரண்டு அம்சங்களை கொண்டது வட சென்னை தொகுதி. கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 14,84,689 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,24,968 பேரும், பெண் வாக்காளர்கள் 7,59,208 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 513 பேர் உள்ளனர்.

* சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
திருவொற்றியூர் கே.பி. சங்கர் (திமுக)
ராதாகிருஷ்ணன் நகர் ஜே.ஜான் எபிநேசர் (திமுக)
பெரம்பூர் ஆர்.டி.சேகர் (திமுக)
கொளத்தூர் மு.க. ஸ்டாலின் (திமுக)
திரு.வி.க. நகர் (தனி) பி.சிவகுமார் (திமுக)
ராயபுரம் மூர்த்தி.ஐட்ரீம் (திமுக)

You may also like

Leave a Comment

10 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi