புதுடெல்லி: 2021-22 நிதியாண்டில் பாஜவுக்கு ரூ.1,912 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்தியாவில் 8 அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகளாக தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை, பாஜ, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகும். இந்த கட்சிகள் 2021-22ம் ஆண்டில் தங்களது வருமானம் எவ்வளவு என்கிற விவரத்தை தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ளன. இதுகுறித்த தகவல்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்: அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய அரசியல் கட்சிகள் மொத்த வருமானம் ரூ.3,289.34 கோடி. ஆளும் பாஜவின் வருமானம் மட்டுமே ரூ.1917.12 கோடி. 8 தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தில் இது பாதிக்கும் மேலாகும். இந்த தொகையில் ரூ.854.46 கோடி செலவிடப்பட்டுள்ளதாக பாஜ தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ.541.27 கோடி. செலவு ரூ.400.41 கோடி. வருமானத்தில் 73.98 சதவீதத்தை காங்கிரஸ் செலவு செய்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ.545.74 கோடி. இந்த கட்சி செலவு செய்துள்ள தொகை ரூ.268.33 கோடி. 8 அரசியல் கட்சிகள் மொத்த வருமானத்தில் 55.09 சதவீதம், அதாவது ரூ.1,811.94 கோடி, தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்த நன்கொடையாகும். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜவுக்கு ரூ.1,033.70 கோடியும், திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.528.13 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.236.09 கோடியும், தேசியவாத காங்கிரசுக்கு ரூ.14 கோடியும் கிடைத்துள்ளது. பிற நன்கொடை வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ள நன்கொடை என பார்த்தால், பாஜவுக்கு ரூ.1,775.43 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.582.52 கோடியும், காங்கிரசுக்கு ரூ.347.99 கோடியும், தேசியவாத காங்கிரசுக்கு ரூ.71.95 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு ரூ.65.87 கோடியும் கிடைத்துள்ளன….