Monday, July 14, 2025
Home செய்திகள் பாளை தூய திரித்துவ பேராலயத்தில் 200வது ஆண்டு விழா கொண்டாட்டம்

பாளை தூய திரித்துவ பேராலயத்தில் 200வது ஆண்டு விழா கொண்டாட்டம்

by Lakshmipathi

*அப்துல்வஹாப் எம்எல்ஏ, மேயர் ராமகிருஷ்ணன் பங்கேற்பு

கே.டி.சி.நகர் : தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலம் பாளையங்கோட்டை சேகரம் தூய திரித்துவ பேராலயத்தின் 200வது ஆண்டு விழா கொண்டாட்டம் நேற்று கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி நடந்த பொது நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ, மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

ஜெர்மனி நாட்டில் இருந்து ஊழியம் செய்வதற்கு நெல்லைக்கு வந்த ரேனியஸ் ஐயர் நெல்லையில் தங்கி இருந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட சர்ச்சுகள், பள்ளிக்கூடங்களை நிறுவினார்.

அவர் காலத்தில் பாளையங்கோட்டையில் தூய திரித்துவ பேராலயம் கட்டித் திறக்கப்பட்டது. ஓலைக்கூரையில் துவக்கப்பட்ட ஆராதனை கூடம் இன்று வானளாவிய கோபுரத்தோடு அமைந்துள்ளது இந்த தேவாலயம்.

ஊசி கோபுரம் என்று அழைக்கப்படும் இத்தேவாலயம் பாளையங்கோட்டை, நெல்லை பகுதியில் வாழும் பல்லாயிர மக்களின் ஆன்மீக சரீர வாழ்வுக்கு ஆசீர்வாதமாக அடிகோலிட்டிருக்கிறது. தற்போது பேராலயத்தின் இருநூற்றாண்டு விழா கொண்டாட்டம் நேற்று (26ம் தேதி) வியாழக்கிழமை கோலாகலமாக துவங்கியது. விழாவை பிஷப் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி பர்னபாஸ் ஜெபித்து துவக்கிவைத்தார்.

இதை முன்னிட்டு இந்த ஆலயத்தை கட்டிய ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ரேனியஸ் ஐயருக்கு பாளை முருகன்குறிச்சி அடைக்கலாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் பிஷப் பர்னபாஸ், முன்னாள் பிஷப் கிறிஸ்துதாஸ் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பேரணி கதிட்ரல் பேராலயத்தை வந்தடைந்தது. பேரணியில் சபை குருவானவர்கள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னர் ஆலய வளாகத்தில் வரலாற்று தூண் திறப்பு விழா மற்றும் புதிய குறுமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பிஷப் பர்னபாஸ் வரலாற்று துணை திறந்துவைத்து புதிய குருமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சிகளில் பேராயரின் துணைவியார் ஜாய் பர்னபாஸ், கதீட்ரல் பேராலய சேகர தலைவர் பாஸ்கர் கனகராஜ், முன்னாள் ‘லே’ செயலாளர் டி.எஸ். ஜெய்சிங், தமிழ்நாடு கிறிஸ்தவ ஆலயங்களின் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரிய தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்தியானந்த், கவுன்சில் தலைவர்கள் ஜெபக்குமார், ஜெபராஜ்,

துரைசிங், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் சுதர்சன், துவக்கப் பள்ளிகளின் மேலாளர் ஸ்டீபன் முல்லர், கதீட்ரல் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் தமிழ்ச்செல்வன், தலைமை ஆசிரியர் டேவிட் தனபால், மேரி சார்ஜென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் அல்பிரட், முன்னாள் பொருளாளர் ஏடிஜேசி மனோகர், கேபிகே செல்வராஜ், மணக்காடு ஜீவக்குமார், பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் லாட்வின், சாப்டர் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் பன்னீர்செல்வம்,

தலைமை ஆசிரியர் அருள்தாஸ் ஜெபக்குமார், வடமேற்கு சபைமன்ற செயலாளர் ஜான்சன், டவுன் இளம்பரிதி, எஸ்டிசி மெட்ரிக் பள்ளித் தாளாளர் ஜேசுராஜா, பள்ளி முதல்வர் மாலின் பிரேமிளா, ஜான்ஸ் பள்ளித் தாளாளர் தங்கத்துரை, திருநெல்வேலி டயோசீசன் ஆப்செட் பிரஸ் கண்காணிப்பாளர் நொபிலி சாமுவேல், மேலாளர் பவுல் தனசிங், எஸ்.டி, காமராஜ், காங்கிரஸ் ஓபிசி தலைவர் டியூக் துரைராஜ், துணைத்தலைவர் ரிச்சர்ட் ஜேம்ஸ் பீட்டர், புல்லட் ராஜா, ஜங்ஷன் அருள், மிலிட்டரி லைன் மைக்கேல், புதுப்பேட்டை சாத்ராக், எபி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னர் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் எம்எல்ஏ, மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கே ஆர் ராஜு, தச்சநல்லூர் மண்டல சேர்மன் ரேவதி பிரபு, நெல்லை மாநகர திமுக கிழக்கு செயலாளர் ஏஎல்பி தினேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

சாந்திநகர் ஏஞ்சல் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஜே.எம். எட்வின் ரவிச்சந்திரன் வரவேற்றார். பாளை கிரிம்ஸன் ஐடிஐ முதல்வர் ஜெப்ரில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் இன்று (27ம் தேதி) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நாளை (28ம் தேதி) சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு டோனாவூர் சுந்தர்சிங் பஜனையும், 29ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பேராலய பெண்கள் பண்டிகையும் நடைபெறும். ஏற்பாடுகளை சேகர தலைவர் பாஸ்கர் கனகராஜ், ரெவரன்ட்டுகள் ஸ்டீபன், மாணிக்கராஜ், தர்மதுரை‌, சேகர திருப்பணிவிடையாளர்கள், பேராலய திருச்சபை
மக்கள் செய்துள்ளனர்.

அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பேரணி

தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலம் பாளையங்கோட்டை சேகரம் தூய திரித்துவ பேராலயத்தின் 200வது ஆண்டு விழா கொண்டாட்டம் நேற்று கோலாகலமாக துவங்கியதை முன்னிட்டு பாளை.

ரேனியஸ் ஐயர் நினைவிடத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பேரணி நடந்தது. இதில் பிஷப் பர்னபாஸ், முன்னாள் பிஷப் கிறிஸ்துதாஸ் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அழைத்து வரப்பட்டனர். மேலும் மறைந்த ஏனைய ஐயர் மற்றும் அவரது துணைவியார் போன்று ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இது அனைவரையும் கவர்ந்தது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi