கீழக்கரை, ஜூன் 18: கீழக்கரை டிஎஸ்பி பாஸ்கரன் அறிவுறுத்தல்படி கீழக்கரை வட்டார பகுதியில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கீழக்கரை அருகே மாயாகுளம் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மரைன் போலீஸ் எஸ்ஐ பெருமாள் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து அதை வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த கோபால் மகன் லிங்கேஸ்வரன்(36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.