கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 43வது வார்டு பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில், குறிஞ்சி நகரில் ஏராளமான தெருக்கள் உள்ளன. அதில், ஒரு தெருவாக அதுவும் முதல் தெருவாக குறிஞ்சி நகர் முதல் தெரு உள்ளது. மிகவும் குறுகிய நிலையில் உள்ள இந்த தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால், சாலை அனைத்தும் சிதிலமடைந்து நடந்து செல்லக் கூட முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையில் சாக்கடை வடிகால் இல்லை, தெரு விளக்குகளும் பழுதடைந்துள்ளது அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் பலனில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெருவை பார்வையிட்டு, சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.