பேரணாம்பட்டு, பிப்.15: பேரணாம்பட்டு பகுதிகளில் 200 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூர் எஸ்பி மதிவாணன் உத்தரவின்பேரில் குடியாத்தம் டிஎஸ்பி தலைமையில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் 50க்கும் மேற்பட்டோர் நேற்று பேரணாம்பட்டு பகுதிகளில் தனித்தனியாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்கள், தமிழக எல்லையான பத்தலப்பல்லி சோதனைச்சாவடி வழியாக மது கடத்தி வந்தவர்கள், வீட்டில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டவர்கள் என ஆசீர்வாதம்(38), சுப்பிரமணி(45), சங்கீதா(40), மைக்கல்(38), மாரி(40), வல்லரசு(45) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், கைதான 6 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
200 கர்நாடக மதுபாக்கெட்டுகள் பறிமுதல் 6 பேர் கைது பேரணாம்பட்டு பகுதிகளில்
0