சேலம், பிப்.22: சேலம் மின்னாம்பள்ளி செல்லியம்பாளையம் குரும்பர் தெருவை சேர்ந்தவர் பவுனாம்பாள் (45). கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் கணவர் இறந்துபோனார். இதனால் பவுனாம்பாள் தாய் தங்கபொண்ணு மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 6ம்தேதி காலை எழுந்து பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பவுனாம்பாள், காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அயோத்தியாப்பட்டணம் குயவன்காடு பகுதியை சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி (26). இவரது வீட்டில் வைத்திருந்த 3 பவுன் நகையை காணவில்லை என அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் எஸ்.ஐ.புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
2 வீட்டில் வைத்திருந்த 7 பவுன் நகை மாயம்
0
previous post